Banana Blossoms in Bambalapitty


By Dushiyanthini Kanagasabapathipillai ~ Pictures via flickr.com/photos/passionparade/

HumanityAshore

[Flash 9 is required to listen to audio.]

மலர்களைப் போல் தங்கை உறங்குகிறாள்

ccccc மலர்களைப் போல் தங்கை உறங்குகிறாள் ccccc

Banana blossoms in Bambalapitty, Colombo, Sri Lanka. The following song is the “all time best” to describe the true affection and care showered by elder brother/s towards their/his younger sister. I have witnessed those who listened to this particular song, their hearts and souls got connected to each and every word, their eyes filled with tears and uncontrollably trickle down at the end.

மலர்களைப் போல் தங்கை உறங்குகிறாள்
மலர்களைப் போல் தங்கை உறங்குகிறாள் - அண்ணன்
வாழ வைப்பான் என்று அமைதி கொண்டாள்
மலர்களைப் போல் தங்கை உறங்குகிறாள் - அண்ணன்
வாழ வைப்பான் என்று அமைதி கொண்டாள்
கலைந்திடும் கனவுகள் அவள் படைத்தாள் - அண்ணன்
கற்பனைத் தேரினில் பறந்து சென்றான்
கலைந்திடும் கனவுகள் அவள் படைத்தாள் - அண்ணன்
கற்பனைத் தேரினில் பறந்து சென்றான்

மாமணி மாளிகை மாதர்கள் புன்னகை
மங்கல மேடையின் பொன் வண்ணம் கண்டான்
மாமணி மாளிகை மாதர்கள் புன்னகை
மங்கல மேடையின் பொன் வண்ணம் கண்டான்
மாவிலை தோரணம் ஆடிடக் கண்டான்
மாவிலை தோரணம் ஆடிடக் கண்டான்
மணமகன் வந்து நின்று மாலை சூடக்கண்டான்

கலைந்திடும் கனவுகள் அவள் படைத்தாள் - அண்ணன்
கற்பனைத் தேரினில் பறந்து சென்றான்

ஆசையின் பாதையில் ஓடிய பெண்மயில்
அன்புடன் கால்களில் பணிந்திடக் கண்டான்
வாழிய கண்மணி வாழிய என்றான்
வான்மழை போல் கண்கள் நீரில் ஆடக்கண்டான்

கலைந்திடும் கனவுகள் அவள் படைத்தாள் - அண்ணன்
கற்பனைத் தேரினில் பறந்து சென்றான்

பூமணம் கொண்டவள் பால்மணம் கண்டாள்
பொங்கிடும் தாய்மையில் சேயுடன் நின்றாள்
பூமணம் கொண்டவள் பால்மணம் கண்டாள்
பொங்கிடும் தாய்மையில் சேயுடன் நின்றாள்
மாமனைப் பாரடி கண்மணி என்றாள்
மருமகள் கண்கள் தன்னில் மாமன் தெய்வம் கண்டாள்

மலர்களைப் போல் தங்கை உறங்குகிறாள் - அண்ணன்
வாழ வைப்பான் என்று அமைதி கொண்டாள்
கலைந்திடும் கனவுகள் அவள் படைத்தாள் - அண்ணன்
கற்பனைத் தேரினில் பறந்து சென்றான்

~~ இயற்றியவர் ~ கவிஞர் கண்ணதாசன், பாடியவர் ~ டி.எம். சௌந்தரராஜன், இசை ~ கே.வி. மஹாதேவன், திரைப்படம் ~ பாசமலர். 1961~

[Flash 9 is required to listen to audio.]

Then Sinthuthe Vaanam ~ Live performace by S. Janaki and S.P. Balasubrahmanyam ~ from movie Ponnukku thanga manasu (1973) ~ Music: G.K. Venkatesh ~ Lyrics: Kannadasan

Dress and Downpour

Dress and Downpour: Rain soaked blossoming Banana in Bambalapitty, Colombo, Sri Lanka

தேன் சிந்துதே வானம் உனை எனைத் தாலாட்டுதே
மேகங்களே தரும் ராகங்களே எந்நாளும் வாழ்க

பன்னீரில் ஆடும் செவ்வாழை கால்கள்
பனி மேடை போடும் பால் வண்ண மேனி
பனி மேடை போடும் பால் வண்ண மேனி
கொண்டாடுதே சுகம் சுகம் பருவங்கள் வாழ்க

தேன் சிந்துதே வானம் உனை எனைத் தாலாட்டுதே
மேகங்களே தரும் ராகங்களே எந்நாளும் வாழ்க

வைதேகி முன்னே ரகுவம்ச ராமன்
விளையாட வந்தால் வேறேன்ன வேண்டும்
விளையாட வந்தால் வேறேன்ன வேண்டும்
சொர்க்கங்களே வரும் தரும் சொந்தங்கள் வாழ்க

தேன் சிந்துதே வானம் உனை எனைத் தாலாட்டுதே

கண்ணோடு கண்கள் கவிபாட வேண்டும்
கையோடு கைகள் உறவாட வேண்டும்
கன்னங்களின் இதம் பதம் காலங்கள் வாழ்க

தேன் சிந்துதே வானம் உனை எனைத் தாலாட்டுதே
மேகங்களே தரும் ராகங்களே எந்நாளும் வாழ்க

[Flash 9 is required to listen to audio.]

Poem by paaventhar Bharathithaasan (April 29, 1891 - April 21, 1964) ~ from Movie Valaiyapathi (1952)

குலிங்கிடும் பூவிலெல்லாம்
தேனருவி கண்டதனால்

“Poetry is to prose as dancing is to walking”~John Wain via YFrog mobile update

குலிங்கிடும் பூவிலெல்லாம்
தேனருவி கண்டதனால்
வண்டு காதலினால்
நாதா தாவிடுதே தாவிடுதே
இன்பம் மேவிடுதே

கொஞ்சிடும் அஞ்சுகமே
ஓடி வந்த ஜோடி புறா
கூடி ஆனந்தமாய்
கொஞ்சி பாடிடுதே பாடிடுதே
இன்பம் நாடிடுதே

குளிருடன் மாலை வேளை
கொள்ளும் நேரம் என்ன சொல்வேன்
மணமும் தென்றல் காற்றும்
ஒன்றை ஒன்று மருவிடுதே

அளாவி வானத்தையே
தாவும் ஒரு மாமுரசை
அன்பால் முல்லை கொடி ஓடித் தாவிடுதே
ஆனந்தம் நாதா மேவிடுதே

ஆதலால் இன்ப வாழ்க்கை
கை கூடும் எவ்வுயிர்க்கும்
ஆதலாலே மயிலே காதலால் நாமிருவர்
சேர்ந்தே இன்பமெல்லாம்
வாழ்ந்தே வாழ்ந்திடுவோம்

என் போல் பாக்கியவதி
யாரும் இல்லை உலகினிலே
இன்பம் இன்பம்
இரண்டு மனம் ஒரு மனமே - பாவேந்தர் பாரதிதாசன்

Moondram Pirai (1982) ~ K.J. Yesudas sings Kannadasan lyrics

ண்ணே கலைமானே கன்னி மயிலெனக் கண்டேன் உனை நானே…..!உனக்கே உயிரானேன் எந்நாளும் எனை நீ மறவாதே!!!

கண்ணே கலைமானே கன்னி மயிலெனக் கண்டேன் உனை நானே.....!உனக்கே உயிரானேன் எந்நாளும் எனை நீ மறவாதே!!!

Banana blossoms in Bambalapitty, Colombo, Sri Lanka

கண்ணே கலைமானே கன்னி மயிலெனக்
கண்டேன் உனை நானே
கண்ணே கலைமானே கன்னி மயிலெனக்
கண்டேன் உனை நானே
அந்தி பகல் உன்னை நான் பார்க்கிறேன்
ஆண்டவனே இதைத் தான் கேட்கிறேன்
ராரிராரோ உராரிரோ ராரிராரோ உராரிரோ
கண்ணே கலைமானே கன்னி மயிலெனக்
கண்டேன் உனை நானே

ஊமை என்றால் ஒரு வகை அமைதி
ஏழை என்றால் அதில் ஒரு அமைதி
நீயோ கிளிப்பேடு பண்பாடும் ஆனந்தக் குயில் பேடு
ஏனோ தெய்வம் சதி செய்தது பேதை கோலம் விதி செய்தது

கண்ணே கலைமானே கன்னி மயிலெனக்
கண்டேன் உனை நானே
அந்தி பகல் உன்னை நான் பார்க்கிறேன்
ஆண்டவனே இதைத் தான் கேட்கிறேன்
ராரிராரோ உராரிரோ ராரிராரோ உராரிரோ

காதல் கொண்டேன் கனவினை வளர்த்தேன்
கண்மணி உன்னை நான் கருத்தினில் நிறைத்தேன்
உனக்கே உயிரானேன் எந்நாளும் எனை நீ மறவாதே
நீயில்லாமல் எது நிம்மதி நீதான் என்று என் சன்னதி

கண்ணே கலைமானே கன்னி மயிலெனக்
கண்டேன் உன்னை நானே
அந்தி பகல் உன்னை நான் பார்க்கிறேன்
ஆண்டவனே இதைத் தான் கேட்கிறேன்
ராரிராரோ உராரிரோ ராரிராரோ உராரிரோ
ராரிராரோ உராரிரோ ராரிராரோ உராரிரோ

~~ இயற்றியவர் ~ கவியரசு கண்ணதாசன், இசை ~ இளையராஜா, பாடியவர்: கே.ஜே. ஜேசுதாஸ், திரைப்படம்: மூன்றாம் பிறை, 1982

Apoorva Raagangal (1975) K. J. Yesudas sings Kannadasan’s lyrics

இசையெனும் அமுதினில்; அவளொரு பாகம்! பின்னிய கூந்தல் கருநிற நாகம் பெண்மையில் இலக்கணம் அவளது தேகம் !!!

இசையெனும் அமுதினில்; அவளொரு பாகம்! பின்னிய கூந்தல் கருநிற நாகம் பெண்மையில் இலக்கணம்  அவளது தேகம் !!!

Banana blossoms in Bambalapitty, Colombo, Sri Lanka

அதிசய ராகம் ஆனந்த ராகம்
அழகிய ராகம் அபூர்வ ராகம்
அதிசய ராகம் ஆனந்த ராகம்
அழகிய ராகம் அபூர்வ ராகம்
அதிசய ராகம்

வசந்த காலத்தில் மழை தரும் மேகம் - அந்த
மழை நீரருந்த மனதினில் மோகம்
மோகம் மோகம்
வசந்த காலத்தில் மழை தரும் மேகம் - அந்த
மழை நீரருந்த மனதினில் மோகம்
இசையெனும் அமுதினில் அவளொரு பாகம்
இசையெனும் அமுதினில் அவளொரு பாகம்
இந்திரலோகத்து சக்கரவாகம்

அதிசய ராகம் ஆனந்த ராகம்
அழகிய ராகம் அபூர்வ ராகம்

பின்னிய கூந்தல் கருநிற நாகம்
பெண்மையில் இலக்கணம் அவளது தேகம்
பின்னிய கூந்தல் கருநிற நாகம்
பெண்மையில் இலக்கணம் அவளது தேகம்
தேவர்கள் வளர்த்திடும் காவிய யாகம் - அந்த 
தேவதை கிடைத்தால் அது என் யோகம்
அது என் யோகம்

ஒரு புறம் பார்த்தால் மிதிலையின் மைதிலி
மறு புறம் பார்த்தால் காவிரி மாதவி
ஒரு புறம் பார்த்தால் மிதிலையின் மைதிலி
மறு புறம் பார்த்தால் காவிரி மாதவி
முகம் மட்டும் பார்த்தால் நிலவின் எதிரொலி
முகம் மட்டும் பார்த்தால் நிலவின் எதிரொலி
முழுவதும் பார்த்தால் அவளொரு பைரவி
அவளொரு பைரவி அவளொரு பைரவி

அதிசய ராகம் ஆனந்த ராகம்
அழகிய ராகம் அபூர்வ ராகம்

~~ பாடலாசிரியர்~ கவிஞர் கண்ணதாசன், பாடியவர் ~ கே.ஜே. ஜேசுதாஸ்,திரைப்படம் ~அபூர்வ ராகங்கள், 1975 ~~

[Flash 9 is required to listen to audio.]

Lyrics ~ K.P. Kamakshi, Music ~ T. Chalapathi Rao and G. Ramanathan, Singers ~ A.M.Rajah and P.Susheela, Movie ~ AmaraDeepam, 1956

தேன் உண்ணும் வண்டு மாமலரைக் கண்டு….. திரிந்தலைந்து பாடுவதேன் ரீங்காரம் கொண்டு…..

தேன் உண்ணும் வண்டு மாமலரைக் கண்டு.....  திரிந்தலைந்து பாடுவதேன் ரீங்காரம் கொண்டு..... 

Honey bee punctuates and strolls through freshly bloomed Banana in Bambalapitty, Colombo, Sri Lanka

தேன் உண்ணும் வண்டு மாமலரைக் கண்டு
திரிந்தலைந்து பாடுவதேன் ரீங்காரம் கொண்டு
பூங்கொடியே நீ சொல்லுவாய்…. ஓ…
பூங்கொடியே நீ சொல்லுவாய்….

வீணையின்ப நாதம் எழுந்திடும் விநோதம்
விரலாடும் விதம் போலவே
காற்றினிலே… தென்றல் காற்றினிலே…
காற்றினிலே சலசலக்கும் பூங்கொடியே கேளாய்
புதுமை இதில் தான் என்னவோ… ஓ…
புதுமை இதில் தான் என்னவோ…

மீன் நிலவும் வானில் வெண்மதியைக் கண்டு
ஏன் அலைகள் ஆடுவதும் ஆனந்தம் கொண்டு
மென் காற்றே நீ சொல்லுவாய்… ஓ..
மென் காற்றே நீ சொல்லுவாய்…

கானமயில் நின்று வான்முகிலை கண்டு
களித்தாடும் விதம் போலவே…
கலையிதுவே… வாழ்வின் கலையிதுவே..
கலையிதுவே… சலசலெனும் மெல்லிய பூங்காற்றே
காணாததும் என் வாழ்விலே… ஓ
காணாததும் என் வாழ்விலே…

கண்ணோடு கண்கள் பேசிய பின்னாலே
காதல் இன்பம் அறியாமல் வாழ்வதும் ஏனோ
கலைமதியே நீ சொல்லுவாய்….. ஓ…
கலைமதியே நீ சொல்லுவாய்….

ஓ… ஓ… ஓ… ஓ… ஓ… ஓ…

Lyrics ~ K.P. Kamakshi, Music ~ T. Chalapathi Rao and G. Ramanathan, Singers ~ A.M.Rajah and P.Susheela, Movie ~ AmaraDeepam, 1956

[Flash 9 is required to listen to audio.]

From Movie ~ Nalla Kudumbam (1950) ~ Song Rendred by Thiruchy Loganathan & M.L.Vasanthakumari

"I value my garden more for being full of blackbirds than of cherries, and very frankly give them fruit for their songs" - Joseph Addison (1672  1719) English poet

Humming bird ~ Kuyil~ in Aandimunai, North West Sri Lanka

Tradition bound Udappu, the charm of a Tamil village

The following song was a number one LOVE hit 1950s. My parents just LOVE this song ~ voice of woman and man singers+perfect lyrics+ magnificent music

.. ஆ.. ஆ.. ஆஆ…
கூவாமல் கூவும் கோகிலம்
கூவாமல் கூவும் கோகிலம் உன்
கொண்டாடும் காதல் கோமளம்
யாரும் காணாமல் நாம் பாடும் கீதமே
கலைமேவும் தமிழ் கூறும் நல் வேதமே

கண்மீதில் பாவைபோல் சேர்ந்து நின்றாலே
காதல் எல்லை பேதமில்லை
கண்மீதில் பாவைபோல் சேர்ந்து நின்றாலே
காதல் எல்லை பேதமில்லை
அன்பு தேனோடும் நீரோடை நாமே

யாரும் கண்டாலும் நாம் பாடும் கீதமே
என்னாளும் அழியாது என் ஜீவனே

கண்ணாடி போலே எண்ணங்கள் யாவும்
பார்வையிலே இங்கு காணுகின்றேன் அன்பே
வார்த்தைகள் ஏனோ?
வீணையின் நாதம் மேவும் சங்கீதம்
நாள்தோறும் நாம் காணும் ஆனந்த இசையாகும்
இன்ப வேளை நமது வாழ்வை
யாரும் கண்டாலும் நாம் பாடும் கீதமே
எந்நாளும் அழியாது என் ஜீவனே
இந்நேரம் ஊரில் என்னென்ன கோலமோ
மணமகனோ இங்கே மணமகளோ அங்கே
வேடிக்கை ஆனதே

இந்நேரம் ஊரில் என்னென்ன கோலமோ
மணமகனோ இங்கே மணமகளோ அங்கே
வேடிக்கை ஆனதே
மணம்கள் இங்கே மணமகன் அங்கே
நாம் காணும் ஆனந்தம் தாய்தந்தை அறிவாரோ?
இன்ப வேளை நமது வாழ்வை

யாரும் கண்டாலும் நாம் பாடும் கீதமே
எந்நாளும் அழியாது என் ஜீவனே
கூவாமல் கூவும் கோகிலம்
கூவாமல் கூவும் கோகிலம் உன்
கொண்டாடும் காதல் கோமளம்
யாரும் காணாமல் நாம் பாடும் கீதமே
எந்நாளும் அழியாது என் ஜீவனே

♥♥♥♥♥ காதல் ♥♥♥♥♥ எல்லை பேதம் இல்லை!!!!!

eeeee காதல் eeeee எல்லை பேதம் இல்லை!!!!!

Honey bees punctuate blossoming Banana in Bambalapitty ~ via mobile update 

சின்னச் சின்ன அன்பில் தானே ஜீவன் இன்னும் இருக்கு..........

தந்தானானே நானே நானே தந்தானானானே
தந்தானானே நானே நானே தந்தானானானே

பச்சைக் கிளிகள் தோளோடு பாட்டுக் குயிலோ மடியோடு
பூலோகம் ஆனந்தத்தின் எல்லை - இந்த 
பூமிக்குக் கண்ணீர் சொந்தம் இல்லை
பச்சைக் கிளிகள் தோளோடு பாட்டுக் குயிலோ மடியோடு
பூலோகம் ஆனந்தத்தின் எல்லை - இந்த 
பூமிக்குக் கண்ணீர் சொந்தம் இல்லை

சின்னஞ்சிறு கூட்டுக்குள்ளே சொர்க்கம் இருக்கு - அட
சின்னச் சின்ன அன்பில்தானே ஜீவன் இன்னும் இருக்கு
பட்டாம் பூச்சிக் கூட்டத்துக்குப் பட்டா எதுக்கு - அட
பாசம் மட்டும் போதும் கண்ணே
காசு பணம் என்னத்துக்கு?

பச்சைக் கிளிகள் தோளோடு பாட்டுக் குயிலோ மடியோடு
பூலோகம் ஆனந்தத்தின் எல்லை - இந்த 
பூமிக்குக் கண்ணீர் சொந்தம் இல்லை

அந்த விண்ணில் ஆனந்தம் இந்த மண்ணில் ஆனந்தம் - அடி
பூமிப் பந்தை முட்டி வந்த புல்லில் ஆனந்தம்
வெயிலின் வெப்பம் ஆனந்தம் மழையின் சத்தம் ஆனந்தம் - அட
மழையில் கூடச் சாயம் போகா வானவில் ஆனந்தம்
வாழ்வில் நூறானந்தம் வாழ்வே பேரானந்தம் - பெண்ணே
நரை எழுதும் சுயசரிதம் அதில் அன்பே ஆனந்தம் ஆனந்தம்!

பச்சைக் கிளிகள் தோளோடு பாட்டுக் குயிலோ மடியோடு
பூலோகம் ஆனந்தத்தின் எல்லை - இந்த 
பூமிக்குக் கண்ணீர் சொந்தம் இல்லை

தந்தானானே நானே நானே தந்தானானானே
தந்தானானே நானே நானே தந்தானானானே
தந்தானானே நானே நானே தந்தானானானே
தந்தானானே நானே நானே தந்தானானானே
உன் மூச்சில் நான் வாழ்ந்தால் என் முதுமை ஆனந்தம் - நீ
இன்னொரு பிறவியில் என்னை பெற்றால் இன்னும் ஆனந்தம்
பனி கொட்டும் மாதத்தில் உன் வெப்பம் ஆனந்தம் - என்
காது வரைக்கும் கம்பளி போர்த்தும் கருணை ஆனந்தம்
சொந்தம் ஓர் ஆனந்தம் பந்தம் பேரானந்தம் கண்ணே
உன் விழியால் பிறர்க்கழுதால் கண்ணீரும் ஆனந்தம் ஆனந்தம்
பச்சைக் கிளிகள் தோளோடு பாட்டுக் குயிலோ மடியோடு
பூலோகம் ஆனந்தத்தின் எல்லை இந்த 
பூமிக்குக் கண்ணீர் சொந்தம் இல்லை

~~ Lyrics~ Vairamuthu, Music~ A.R>Rahman and Sung By ~ Dr. K.J.Jesudas for Indian Movie in 1996 

Swing to Click

Swing to Click

Dream and Dance

Dream and Dance